நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சீராப்பள்ளி மெயின் ரோட்டில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது தார் பெயர்ந்தும், சாலையின் நடுவே பள்ளம், பள்ளமாக இருப்பதாலும் வாகன ஓட்டிகள் அச்சப்பட்டு செல்கின்றனர். இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. எனவே சேதமடைந்த தார்சாலையை சீரமைக்க வேண்டும்.