பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் புதிய தார்சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ள நிலையில், பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.