பெரம்பலூர் மாவட்டம் முருகன்குடியில் இருந்து பெருமத்தூர் செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் நிலைதடுமாறி சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.