சேலம் இரும்பாலை வழி புதுரோடு முத்துநாய்க்கன்பட்டி பிரிவு சாலையின் குறுக்கே தோண்டப்பட்டதால் பள்ளம் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைத்தால் விபத்துகளை தவிர்க்கலாம்.