திருவள்ளூர் மாவட்டம் வெங்கல்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ஏராளமான மாடுகள் ஆங்காங்கே சுற்றித் திரிகின்றன. சில சமயம் சாலையிலேயே படுத்துக்கொள்கின்றனர். இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.