காலி மதுபாட்டில்களை சாலையில் உடைக்கும் சமூக விரோதிகள்

Update: 2026-02-01 11:13 GMT

அரியலூர் அருகே அமைந்துள்ள அம்மாக்குளம் கிராமத்தில் நூற்றுக்கணக்காக வீடுகள் உள்ளன. அரியலூரில் இருந்து அம்மாக்குளம் செல்லும் சாலையில் சாலையோரம் அமர்ந்து சமூக விரோதிகள் பலரும் மது அருந்தி வருகின்றனர். இதில் ஒரு சிலர் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை சாலையில் உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் காலில் கண்ணாடி துகள்கள் கிழித்து காயமடைகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் வாகனங்களும் பழுதாகின்றன. இதனால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்