பொதுமக்கள் அவதி

Update: 2026-02-01 11:12 GMT

கரூர் மாவட்டம் நொய்யர் அருகே முத்தனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு புகழூர் வாய்க்கால் அருகே மயானம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் நொய்யர் - வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் இருந்து முத்தனூர் மயானத்திற்கு செல்லும் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் மயானத்திற்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்