சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு உட்பட்ட கிராமப்புற பகுதியில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயமடைகின்றனர். மேலும் சில வாகனஓட்டிகள் சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?