ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையில் பயணிக்கும் பாதசாரிகள், வாகனஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகின்றது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?