கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் எதிரில் கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் தவறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.