குண்டும், குழியுமான சாலை

Update: 2026-01-25 13:07 GMT

கரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இவற்றில் அவ்வப்போது மண்கள் நிரப்பப்படுகிறது. இருப்பினும் மழை பெய்யும் போது மீண்டும் அதே இடத்தில் பள்ளம் ஏற்படுகிறது. மேலும் தார் சலையில் மண் கொட்டப்படுவதினால், மழை பெய்யும் போது சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை நிரந்தரமாக சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்