கடமலைக்குண்டுவை அடுத்த வருசநாட்டில் இருந்து பவளநகர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மழைக்காலங்களில் அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.