மதுரை நகர் வி.கரிசல்குளம் பகுதியில் உள்ள மண் சாலை சேதமடைந்து மேடும் பள்ளமுமாக காணப்படுகின்றது. இதனால் மழை பெய்யும் காலங்களில் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி சகதியாக காட்சியளிக்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையை ஆய்வு செய்து புதிய தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.