வெண்ணந்தூர் காவலர் குடியிருப்பு எதிரே நடுப்பட்டி செல்லும் சாலையில் குழாய் பதிக்க தோண்டப்பட்டு பல மாதங்களாக மூடப்படாமல் கிடக்கிறது. இதனால் அந்த இடத்தில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு உடைந்த குழாயை சரி செய்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.