தடுப்புகள் அவசியம்

Update: 2026-01-18 14:07 GMT

நாமக்கல்-சேலம் பிரதான சாலை அருகில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக சென்று வரும் பொதுமக்கள் அங்குள்ள பிரதான சாலையை கவனம் இன்றி அடிக்கடி கடந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த அலுவலகம் முன்பாக சாலையின் ஒரு பகுதியில் இரும்பு தடுப்புகள் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்