ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகம் உள்ள சாலையில் 2 பஸ்கள் எதிரெதிரே சென்று வர ஏதுவாக தார்சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையில் உள்ள கடைகளின் மேற்கூரைகளின் ஆக்கிரமிப்புகளும், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. எனவே இந்த சாலையை ஆக்கிரமித்துள்ள மேற்கூரைகளையும், வாகனங்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.