கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு தேசிய நெடுஞ்சாலையில் உயர் மட்ட மேம்பாலம் கட்டி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த மேம்பாலம் கட்டப்பட்ட நாட்களில் வாகன ஓட்டிகள் சர்வீஸ் சாலையை பயன்படுத்தி வந்தனர். அந்த சர்வீஸ் சாலை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. அந்த சாலையை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு உள்ள சர்வீஸ் சாலையை புதிதாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.