பர்கூர் ஒன்றியம் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பி.டி.ஓ. அலுவலகம் எதிரில் உள்ள தென்றல் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சிமெண்டு சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து, மோட்டார் சைக்கிளில் செல்லவும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரமான சிமெண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?