கரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் சாலையான அண்ணாசாலையில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.