பெயர்ந்து கிடக்கும் சாலை

Update: 2026-01-18 10:51 GMT

கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக மலப்புரத்துக்கு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் இன்டர்லாக் கற்களை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பதித்தனர். தற்போது அவற்றில் பெரும்பாலானவை பெயர்ந்து கிடக்கிறது. இதனால் சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் இயக்குவதற்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இன்டர்லா கற்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்