கருர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் வயலூர் கிரமாம் தேவசிங்கம்பட்டி தெற்குதெரு பகுதியில் உள்ள சாலை மண்சாலையாக உள்ளதால், மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே மண்சாலையை தார்சாலையாக மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.