சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-01-18 07:11 GMT

வெள்ளிச்சந்தை அருகே செட்டிவிளை ஊர் உள்ளது. இந்த ஊரில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தார் சாலை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. மேலும், மழை காலங்களில் சாலை மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி இந்த சாலையை தார் சாலையாக மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்