மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி டி.பி.கே. சாலையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு பாலிடெக்னிக்-பெரியார் பஸ் நிலையம் செல்லும் பாலத்தின் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. மதுரையில் பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் பிரதான பாலமாக இது இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?