கடமலைக்குண்டு ஒன்றியம் சோலைத்தேவன்பட்டி அங்கன்வாடி மையம் அருகே உள்ள சாலை சேதமடைந்து மண்பாதையாக மாறிவிட்டது. மேலும் மழைக்காலங்களில் இந்த சாலை சகதிக்காடாக மாறுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.