கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நடைபெற கூடிய இடங்களில் மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு, மேலுமலை, சாமல்பள்ளம், கொல்லப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் பாலங்கள் கட்டி பயன்பாட்டிற்கு வந்தன. அதே போல சென்னை சாலையில் கந்திகுப்பத்தில் பாலம் கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில் திடீரென்று அந்த பணிகள் நடைபெறவில்லை. இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.