பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக ஆற்றங்கரை சாலை வழியாக அதிகளவில் வாகனங்கள் வருகின்றன. எனவே, மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து விபத்துகளை தடுக்கும் வகையில் தேவையான இடங்களில் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.