தேவூரில் இருந்து போலீஸ் நிலையம் வழியாக அம்மாபாளையம் வாய்க்கால்கரை வரை தார்சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க செல்லும் மக்கள் மற்றும் போலீசார் வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் விவசாயிகள் டிராக்டர், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் விவசாய நிலத்தில் விளையும் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் இந்த சாலை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும், பள்ளங்கள் ஏற்பட்டு பெயர்ந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே அதிகாரிகள் தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.