திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆர்.வெள்ளோடு ஊராட்சிக்கு உட்பட்ட அரவக்குறிச்சி சாலை சேதமடைந்து உருக்குலைந்து காணப்படுகிறது. ஜல்லிக்கற்கள் பரவி கிடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் பாதசாரிகளின் பாதங்களையும் பதம் பார்க்கின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.