தெருவில் தேங்கும் மழைநீர்

Update: 2026-01-04 16:26 GMT

தேனி சடையால் கோவில் 3-வது தெருவின் இருபுறமும் கட்டுமான பணிகளுக்கான பொருட்களை குவித்து வைக்கின்றனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறாமல் தெருவிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே கட்டுமான பொருட்களை தெருவில் குவித்து வைப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்