கான்கிரீட் சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-01-04 16:00 GMT

கரூர் மாவட்டம் கோம்புப்பாளையம் பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த சாலையை அப்பகுதி பொதுமக்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது குண்டும், குழியுமாக உள்ளதால் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்துள்ள கான்கிரீட் சாலையை சீரமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்