கிருஷ்ணகிரியில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சிலர் தட்டுத்தடுமாறி சென்று விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.