வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-01-04 12:45 GMT

சுசீந்தரம் அக்கரையில் இருந்து மருங்கூர் செல்லும் சாலையின் குறுக்கே நாற்கர சாலை செல்கிறது. நாற்கர சாலையை கடந்துதான் பல அரசு பஸ்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த நாற்கர சாலையை கடந்து செல்லும் பகுதியில் இருபுறங்களிலும் பெரியபள்ளம் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையோரத்தில் உள்ள பள்ளங்களை கான்கிரீட் போட்டு சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்