சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-01-04 12:37 GMT

ஈத்தங்காட்டில் இருந்து வடக்கு தாமரைகுளம் செல்லும் வழியில் ரெயில் தண்டவாளம் உள்ளது. இதன் அருகே உள்ள கால்வாய் சாலையின் குறுக்கே பாய்கிறது. இதற்காக சாலையின் அடியில் ராட்சத குழாய்கள் பதித்து அதன்மேல் கான்கிரீட் போடப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வின் காரணமாக கான்கிரீட்கள் சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்