சாலை அமைக்க கோரிக்கை

Update: 2026-01-04 11:51 GMT

பெரம்பலூர் - அரியலூர் நெடுஞ்சாலை மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சமீபத்தில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் பேரளி முதல் நான்கு ரோடு வரையும், ஒதியம் பிரிவு சாலை பகுதியிலும் புதிதாக சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே விடுபட்ட பகுதிகளிலும் தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்