வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-01-04 11:50 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் குரும்பாபாளையம் கிராமம் முதல் சாத்தனூர் குடிகாடு வரை உள்ள சாலையில் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. அந்த மரங்கள் சாலையின் மையப்பகுதி வரை வளர்ந்துள்ளதால், முன்னால் செல்லக்கூடிய வாகனங்கள் சரியாக தெரியாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சீமைக்கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்