திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில் நிலையத்திலிருந்து தக்கோலம் வரை செல்லும் பாதையில் உள்ள தார் சாலையின் ஒரு பகுதி பள்ளங்களோடு காணப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக சாலையை சீரமைத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.