சாலையில் குழி

Update: 2026-01-04 09:51 GMT

கோவை வேடபட்டி அய்யாவு நகர் 4டி தெருவில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையோரத்தில் குடிநீர் குழாய் உடைந்து உள்ளது. அதை சீரமைக்க குழி தோண்டப்பட்டது. அந்த குழியில் குடிநீர் தேங்கி நிற்கிறது. ஆனால் குழாய் சீரமைப்பு பணியை இன்னும் முடிக்கவில்லை. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அந்த குழிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே விரைவாக சீரமைப்பு பணியை முடித்து, சாலையையும் சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்