பந்தலூரில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடி வருகின்றனர். ஆனால் பூங்காவுக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. சேறு, சகதி நிரம்பிய பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வரும் சிறுவர்கள் கால் தவறி விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே பூங்காவுக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.