வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-12-28 17:37 GMT

திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கரை வரை உள்ள சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் ஒளிர்ப்பான்கள் பொருத்தப்படாமல் உள்ளது. மேலும் வேகத்தடை உள்ள இடங்களில் அறிவிப்பு பலகை இல்லாத நிலையில், போதிய வெளிச்சமும் இல்லை. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் வேதத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனங்களை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடையில் ஒளிர்ப்பான்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்