மேல்மலையனூர் அருகே சாத்தாம்பாடி மேம்பாலத்தில் இருந்து வடவெட்டி கூட்டுரோடு வரை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.