பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு சென்றுவர கடும் சிரமம் அடைகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலன்கருதி இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.