கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி டவுனில் இருந்து பேரிகை செல்ல கூடிய பிரதான சாலையின் நுழைவு பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. சூளகிரி டவுனில் இருந்து வருபவர்கள், பேரிகை சாலையில் இருந்து வருபவர்கள் என பலரும் சந்திக்கும் சாலையாக இந்த ரோடு உள்ளது. இங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.