குண்டும், குழியுமான சாலை

Update: 2025-12-28 13:09 GMT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே உள்ள கைலாசபுரம் சாலை முதல் வீரபோகம் கிராமம் வரை செல்லும் தார்சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவர்கள் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்