சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2025-12-28 13:07 GMT

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே மேலணிக்குழி செல்லும் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், தற்போது சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் பயணம் செய்யும் கர்ப்பிணிகள், வயதானவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினமும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மேலணிக்குழி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்