சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்

Update: 2025-12-28 13:04 GMT

செங்குன்றம் ஜி.என்.டி. சாலையில் இருபுறமும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் கடந்து செல்ல கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றன. போலீஸ் நிலையத்தை ஒட்டியே வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவது வேதனையின் உச்சமாக உள்ளது. சாலையோரத்தில் பொறுப்பற்று நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றி, போக்குவரத்து நெரிசலுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்