திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரயில் நிலையத்திலிருந்து தக்கோலம் வரை செல்லும் பாதையில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றனர். திடீரென அந்த சாலையில் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகின்றனர். மேலும் மழைக்காலங்களில் பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.