சேதமடைந்த நடைபாதை

Update: 2025-12-28 12:58 GMT

சென்னை பெரம்பூர் நியூ பேரான்ஸ் சாலையில் சென்னை மாநகராட்சி வடியா பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடல் உள்ளது. அந்த பகுதி மக்கள் பூங்காவில் தினமும் நடைபயிற்சி, சிறுவர் மாலை நேரங்களில் விளையாடுதல் போன்று பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த பூங்காவில் உள்ள நடைபாதைகள் சில இடங்களில் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் அதில் நடக்கும் போது காயப்படும் நிலை ஏற்படுகிறது. எனேவ மாநகராட்சி அதிகாரிகள் பூங்காவின் சேதமடைந்த நடைபாைதயினை சரிசெய்து தர வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்