கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியசோலை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இந்த சாலையில் பல இடங்கள் மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.