பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தொண்டியாளம் பகுதியில் நீரோைட ஒன்று உள்ளது. இந்த நீரோடையின் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு பள்ளங்கள் உருவாகி உள்ளது. இதை ஒட்டி உள்ள சாலையும் சேதம் அடைந்து இருப்பதால் வாகனங்கள் செல்ல முடிவது இல்லை. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைத்து நீரோைட கரையை பலப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.