விசுவாசபுரத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் தோவாளை மெயின் ரோட்டில் இருந்து கால்வாயின் மேல் பகுதியில் குறுகிய பாலம் வழியாக செல்கின்றனர். இந்த பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் தற்போது அதன் கைப்பிடி சுவர்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பாலம் வழியாக செல்லும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் நலன்கருதி பாலத்தில் சேதமடைந்த கைப்பிடி சுவர்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.